வடக்குக்கான தொடரூந்து சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு

Wednesday, 07 October 2015 - 9:53

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+
தடைப்பட்டிருந்த வடக்குக்கான தொடரூந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அம்பன்பொல மற்றும் கல்கமுவ தொடரூந்து நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி வந்த கடுகதி தொடரூந்து ஒன்று நேற்று தடம்புரண்டது.

இதன் காரணமாக தொடரூந்து பாதையும் சேதமடைந்தது.

இதனை அடுத்து கொழும்பு காங்கேசன்துறை மற்றும் கொழும்பு மன்னார் இரவு நேர இரு வழி அஞ்சல் தொடரூந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

எனினும், திருத்த பணிகள் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை 5.45க்கு கொழும்பில் இருந்து யாழ்பாணத்திற்கான தொடரூந்து சேவை இடம்பெற்றதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips