அமெரிக்கா விசேட போர் நிபுணத்துவ படைகளை ஈராக்கில்

Wednesday, 02 December 2015 - 10:12

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் அமெரிக்கா தமது படைகளை அங்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அங்கு நிலைகொண்டுள்ள துருப்பினருக்கு மேலதிகமாக விசேட போர் நிபுணத்துவம் கொண்ட படைகளை நிலைநிறுத்தவுள்ளதாக அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் எஷ்டன் காட்டர் தெரிவித்துள்ளார்.

ஈராக் அரச நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

ஈராக் படைகள் மற்றும் குர்திஸ் பெஷ்மேகா  தரப்பினருக்கு இதன்போது ஒத்துழைப்பு வழங்கப்படும் என காட்டர் குறிப்பிட்டார்.

சுற்றிவளைப்புகள், பணயக்கைதிகளை விடுவித்தல், மற்றும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர்களை கைது செய்தல் போன்ற நடவடிக்கைகள் அமெரிக்க விசேட போர் நிபுணத்துவம் கொண்ட படையினரால் முன்னெடுக்கப்படும். 

இதேவேளை, சிரியாவிலும் தமது ஒரு தரப்பு படைநடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.
கடந்த வருடத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பாரிய நிலப்பரப்புகளை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, காவல்துறை உத்தியோகத்தர் ஊரசவளை ஊநபெ. கொல்லப்பட்டமை தொடர்பாக சிட்னி காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத தொடர்புகளை கொண்ட தரப்பினரால் அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips