தாய்வானில் கட்டிட இடிபாடுகளில் 130 பேர் சிக்கியுள்ளனர்

Sunday, 07 February 2016 - 10:31

%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+130+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D
தாய்வான் நில அதிர்வில் 130 வரை பேர் இடிபாடுக்குள் சிக்கியுள்ளனர்.
 
தாய்வான் நில அதிர்வில் 17 மாடிகளைக் கொண்ட கட்டடத்தொகுதி முற்றாக சேதமடைந்த நிலையில், 130 பேர் வரை இடிபாடுகளுக்கு இடையே அகப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இடிபாடுகளுக்கு இடையே அகப்பட்டுள்ளவர்களில் 29 பேரை மீட்டெடுக்க முடியும் என தெரிவித்துள்ள மீட்பு பணியாளர்கள், ஏனையவர்களை மீட்பது தற்போதைய நிலையில் சிரமமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
 
தற்போது கனரக இயந்திரங்கள் மற்றும் மோப்ப சக்தியுள்ள நாய்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
நேற்று காலை தாய்வானில் அடர்த்தியான ஜனசஞ்சாரத்தைக் கொண்ட பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வில் பெண் சிசு உட்பட 19 பேர் பலியானமை இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
நில அதிர்வு இடம்பெற்ற நகரத்தில் ஏராளமான தொடர்மாடிகள் உள்ளதுடன், 20 லட்சம் மக்கள் வசிப்பதும் குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips