மனிதவுரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை - பிரதமர்

Tuesday, 09 February 2016 - 13:36

%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+
வடக்கு மாத்திரம் அன்றி நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் மனிதவுரிமையை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட்-அல் ஹுசேன் இன்று முற்பகல் அலரிமாளிகையில் வைத்து பிரதமரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர், தென்பகுதி மக்களும் கடந்த காலங்களில் மனிதவுரிமை மீறல்களை எதிர்கொண்டதாக குறிப்பிட்டார்.

கடந்த ஒரு வருடத்தில் நாட்டில் ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்கும், சட்டத்தின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்தவிடயங்கள் தொடர்பாக பிரதமரும், மனிதவுரிமைகள் ஆணையாளரும் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.

மனிதவுரிமைகளை பாதுகாக்கும் முகமாக புதிய அரசாங்கம் எடுத்துள்ள செயற்பாடுகள் பற்றி ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips