மஹிந்த ராஜபக்ஸ தரப்பு நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்

Tuesday, 09 February 2016 - 15:07

%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
தமது அணியை நாடாளுமன்றத்தில் சுயாதீன கட்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என கோரி மஹிந்த ராஜபக்ஸ தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

இதன் காரணமாக நாடாளுமன்ற அமர்வில் இடையூறுகள் ஏற்பட்டன.

இந்த நிலையில், கருத்துரைத்த சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் நேரத்தை அதிகரிப்பது தொடர்பில் தீர்வை முன்வைக்க முடியும்.

எனினும் சுயாதீன செயற்பாடு தொடர்பாக அனுமதியை வழங்க முடியாது என குறிப்பிட்டார்.

இந்த பிரச்சினை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிக்குள்ளேயே தீர்க்கவேண்டிய பிரச்சினையாகவே தாம் கருதுவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நடுவே வந்து எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்தநிலையில், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபை நடுவே வந்து, எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips