காணிகள் தொடர்பில் இறுதி அறிக்கை அடுத்த வாரம் - ஹிஸ்புல்லா

Tuesday, 09 February 2016 - 20:51

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE+
வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளின் விபரம், மற்றும் அகதி முகாம்களின் எண்ணிக்கை தொடர்பில மிகத் தெளிவான இறுதி அறிக்கை அடுத்த வாரம் சமர்பிக்கப்படவுள்ளது.

மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்படி. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக படையினர் வசமுள்ள காணிகளில் விடுவிக்கக்கூடியவற்றை இனங்கண்டுள்ளதாகவும், அதனை இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிடடுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மாதயிறுதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடி ஆராய்ந்த பின்னர் மீள்குடியேற்றுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளின் விபரம், மற்றும் அகதி முகாம்களின் எண்ணிக்கை  தொடர்பிலான முழுமையான அறிக்கை இன்னும் ஒருவாரத்தில் பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது. 

பின்னர் அது ஜனாதிபதியிடம் கையளிக்கபட்டு இந்தமாத இறுதியில் மீள்குடியேற்றம் தொடர்பில் விசேட கலந்துரைடயாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது.

மைத்திரி – ரணில் அரசின் வாக்குறுதிக்கமைய வடக்கில் மீள்குடியேற்றப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக கடந்த மாதம் 19 ஆம் திகதி விசேட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தலைமையிலான இக்குழுவில் முப்படைத் தளபதிகளும் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தக்குழு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு மீள்குடியேற்றம் தொடர்பில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடியது.

இதற்கமைய படையினர் வசமுள்ள விடுவிக்க கூடிய காணிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு 65ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனின் வேண்டுகோளுக்கு அமைய இந்ததிட்டம் அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் ஹிஸ்புல்லா  தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips