சிங்கப்பூர் அரசாங்கம் இலங்கைக்கு நிவாரண உதவி..

Tuesday, 24 May 2016 - 9:14

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF..
இலங்கையில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் ஒரு லட்சம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கவுள்ளது.

ஸ்டெய்ர்ட்ஸ் டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களுக்காக ஒன்றரை லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கமும் அறிவித்துள்ளது.

இந்த நிதி உதவிகள் சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக  அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் இலங்கைக்கு நிதி மற்றும் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips