தொடர்ந்து நல்லாட்சிக்கு அமெரிக்கா உதவும்..

Wednesday, 25 May 2016 - 11:00

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..
கடந்த வருடத்தில் மாத்திரம் அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை  உதவியாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதுவர் அதுல் கெசப் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வருடங்களிலும் இதே அளவு தொகைக்கான கோரிக்கை, நல்லாட்சி அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்களுக்காக விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு சிறப்பான முறையில் உள்ளது.

இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அரசாங்கம் அவசியமான அரசியலமைப்பு உருவாக்கம் நல்லிணக்கம், ஐக்கிய நாடுகள் சபையின் யோசனைகளுக்கான அர்ப்பணிப்புக்களை நோக்கி நகர்கிறது.

இந்தநிலையில் அமெரிக்கா, தமது பங்கிற்காக இலங்கையை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்கிவருகிறது.

அத்துடன் இலங்கையில் உள்ள அனைவரும் சம உரிமை, சம சந்தர்ப்பத்துடன் வாழ அமெரிக்கா துணையாக இருக்கிறது என்றும் அதுல் கெசப் குறிப்பிட்டுள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார் என்று அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips