மலிக் சமரவிக்ரம இந்தியா விஜயம்...

Monday, 27 June 2016 - 15:25

%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D...
சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இந்தியவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
 
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடல் நடத்துவதற்காகவே அவர் இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
ஆசிய நாடுகளுடன் உறவுகளை விருத்தி செய்வதன் அவசியம், எனவே அதன் அடிப்படையில் உடன்படிக்கைகளும் செய்துக்கொள்ளப்படவுள்ளன.
 
எனினும் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஆசிய நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்தவில்லை.
 
இந்தநிலையில் ஆசிய நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்தும் முகமாக குழு ஒன்றை அமைத்துள்ளாக பிரதமர் நேற்று காலியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்தார்.
 
இதில் திறைசேரி செயலர் ஆர் பாஸ்கரலிங்கம், இந்திரஜித் குமாரசுவாமி, மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன், முர்தாஸ் ஜெபர்ஜி உட்பட்ட 10 பேர் உள்ளடங்கவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips