வடக்கில் காணிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Monday, 27 June 2016 - 16:06

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
வடக்கு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் நல்லூரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் வரை சென்று அந்த அலுவலகத்தில் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அத்துடன்,  வடமாகாண முதலமைச்சர், ஆளுனர் மற்றும். அரசாங்க அதிபர் ஆகியோரிடமும் மனுக்கள் கையளிக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில்  நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எஸ்.ஸ்ரீதரன், ஈ.சரவணபவன் வடமாகாண எதிர்கட்சித் தலைவர் தவராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடக்கில் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் அவர்களின் போராட்டம் நியாயமானது என தெரிவித்தார்.

இதேவேளை,  வடக்கில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவிலேயே அமைக்க வேண்டும்.
அதனை வேறு இடத்திற்கு கொண்டுச் செல்லக் கூடாது என வலியுறுத்தி வவுனியாவில் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று ஆராம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா புதிய சந்தைக்கு அருகில் இந்த போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வடக்கு மாகாண தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இதேவேளை பட்டதாரி ஆசிரியர்களால் லோட்டஸ் சுற்று வட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் காலி வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips