இராணுவப் பாதுகாப்பை நீக்காதீர்கள் - கோட்டா

Monday, 27 June 2016 - 19:04

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE
தமக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பை நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் திகதி கொழும்பு – பித்தளை சந்தியில் இடம்பெற்ற அவருக்கு எதிரான தற்கொலைத் தாக்குதல் குறித்த வழக்கு இன்று கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது இந்த தாக்குதல் தொடர்பில் 13 குற்றச்சாட்டுகள் முன்வைத்து கைது செய்யப்பட்டுள்ள 4 விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு நிறைவில் நீதிமன்றத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, தமது உயிருக்கு இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பை நீக்க வேண்டாம் என்று தாம் பாதுகாப்பு செயலாளரிடம் கோரி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips