பொது நல வாய நாடுகள் ஆதரவு – மகிந்த சமரசிங்க...

Wednesday, 27 July 2016 - 7:53

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E2%80%93+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95...
புதிய அரசியல் யாப்பில் அடிப்படை உரிமைகள் சார்ந்த வரைவுகளை இலங்கையின் நாடாளுமன்றமே தீர்மானித்துக் கொள்வதற்கு, பொதுநலவாய நாடுகளின் மனித உரிமைகள் நிபுணர்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்பு தயாரிப்புக்காக நாடாளுமன்றம் அரசியல் பேரவையாக மாற்றப்பட்டு, பல்வேறு உபகுழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றில் அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழுவிற்கு அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமைவகிக்கிறார்.

அவரது கோரிக்கையின் அடிப்படையில் பொதுநலவாய நாடுகள் செயலகத்தின் மனித உரிமைகள் மற்றும் அரசியல் யாப்பு தொடர்பான மூன்று நிபுணர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

அவர்கள் புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்துக்கு வழங்கியுள்ள பங்களிப்பு தொடர்பிலும், அமைச்சர் மகிந்த சமரசிங்க வரவேற்பை தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips