2500 ரூபா தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி

Friday, 29 July 2016 - 20:47

2500+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் உறுதியளித்தபடி இரண்டாயிரத்து 500 ரூபா இடைக்கால நிவாரணத்தை பெற்றுக்கொடுத்தமை தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் இடைக்கால வெற்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இந்த கருத்தை அமைச்சர்களான மனோ கணேசன், வீ. ராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம் ஆகியோர் வெளியிட்டனர்.
 
அரசாங்கத்தின் தலையீட்டால், இந்த நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், கூட்டு உடன்படிக்கையை செய்துகொள்ளும் தொழிற்சங்கங்கள் தாங்கள் உறுதி அளித்தபடி ஆயிரம் ரூபா வேதன உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
 
செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன் இடைக்கால நிவாரணத்தை பெற்றுக்கொடுத்தமை தமது கூட்டமைப்பின் திட்டமிட்ட செயற்பாட்டின் அடிப்படையில் கிடைத்த வெற்றியாகும் என குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மலையகத்தின் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் கலாச்சார பண்புடன் மக்கள் முன் பேசுவதற்கு பழகிக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 
இதுவரை காலமும் மலையகத்திலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மேற்கொள்ளாத பல்வேறு அபிவிருத்திகளை தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு மேற்கொண்டு வருவதாக இந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips