உலக அளவில் இலங்கை இராணுவத்திற்கு கிடைத்த கௌரவம்...

Tuesday, 23 August 2016 - 14:03

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D...
கண்ணிவெடி அடையாளம் காணும் சிறந்த குழுவாக இலங்கை இராணுவம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கண்ணிவெடி தொடர்பான அமெரிக்காவை கேந்திரமாக கொண்டு உலகம் பூராகவும் செயற்படும் மார்ஷல் லெகசி நிறுவனத்தால் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இராணுவ பொறியாளர்கள் ரெஜிமென்டின் 'எல்வின்' என்ற மோப்ப நாய் மற்றும் அதன் கையாளியான லான்ஸ் கோப்ரல் ஜீ.என்.டபில்யூ.என் நவரட்னவுமே இவ்வாறு கண்ணிவெடி அடையாளம் காணும் சிறந்த பிரிவாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 26ம் திகதி வாசிங்டனில் இடம்பெறும் வைபவத்தில் இவர்களுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips