ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீராங்கனைக்கு ஷிகா வைரஸ் தாக்குதல்?

Tuesday, 23 August 2016 - 14:14

%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%3F++
ரியோ ஒலிம்பிக் விளையாட்டில் 3000 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் பங்கேற்று இந்திய திரும்பியுள்ள தடகள வீராங்கனை சுதா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஷிகா வைரஸ்சால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் முடிந்த ரியோ ஒலிம்பிக் விளையாட்டில் தடகள போட்டியில் பங்கேற்றார் சுதா சிங். 3000 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் பங்கேற்ற சுதா சிங் வெற்றி பெறவில்லை. இதனையடுத்து, கடந்த 20ம் திகதி சுதா நாடு திரும்பினார்.

வரும் போதே அவருக்கு காய்ச்சலும் உடல் வலியும் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து, இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல இயக்குநர் ஷியாம் சுந்தர், சுதா சிங் ஜிகா வைரஸ்சால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் இதனால் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

சுதா சிங்கிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரி, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நுளம்பு மூலம் பரவக் கூடிய ஷிகா வைரஸ் மிக மோசமானது என்கின்றனர் மருத்துவர்கள்.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips