வங்கி கணக்கில் 2,700 கோடி ரூபாய் முடக்கப்பட்டது!! அதிரடி நடவடிக்கை...

Tuesday, 25 October 2016 - 13:34

+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+2%2C700+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%21%21+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88...
பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரின் வங்கி கணக்குகளை பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது. அதற்கான நடவடிக்கையை உள்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் 5100 பேரின் வங்கி கணக்குகளை பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி முடக்கியுள்ளது.

அவர்களில் ஜெய்ஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் முக்கியமானவர் ஆவார். காஷ்மீர் மாநிலம் பதன்கோட் விமான படை தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்.

தற்போது இவர் போலீஸ் பாதுகாப்பில் இருக்கிறார். வங்கி கணக்குகள் 3 பிரிவுகளில் முடக்கப்பட்டுள்ளது. அதில் மசூத் அசாரின் வங்கி கணக்கு 1997-ம் ஆண்டு தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை எனப்படும் 'ஏ' பிரிவின் கீழ் உள்ளது.

இந்நிலையில்,  5100 பேரின் ரூ.2,700 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips