பிடல் கெஸ்ரோ இறுதி கிரியைகள் தொடர்பான நிகழ்வு...

Sunday, 04 December 2016 - 14:39

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81...
கடந்த மாதம் 25ஆம் திகதி தமது 90வது வயதில் காலமான கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் கெஸ்ரோ இறுதி கிரியைகள் தொடர்பான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கியூபாவின் நகரமாக சந்தியாகோவில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு அவரது சகோதரர் ராகுல் கெஸ்ரோ தலைமை தாங்கினார்.

இந்த இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கிலான மக்கள் உணர்ச்சிபூர்வமாக கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ராகுல் கெஸ்ரோ தமது சகோதரரின் கொள்கையை முற்றாக தொடர்ந்தும், கியூபா மக்களின் நலனுக்காக பேணவுள்ளதாகவும் உறுதியளித்தார்.

காலம் சென்ற பிடல் கெஸ்ரோவை நினைவு கூறும் வகையில் வீதிகளுக்கோ அல்லது பிரதேசங்களுக்கோ நாமகரணம் இடப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை பிடல் கெஸ்ரோவின் வேண்டு கோளிற்கமையவே மேற்கொள்ளபடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கியூப புரட்சி ஆரம்பமான சந்தியாகோவில் உள்ள பிஜெனியா மாயனத்தில் கியூபா சுதந்திரத்தின் கதாநாயன் என கருதப்படும் ஜோஸ் மாட்டியின் கல்லறைக்கு அருகாமையில் வைக்கப்பட்டுள்ளது.

இவரது அஸ்தி தலைநகர் ஹவானாவில் இருந்து 4 நாள் பயணத்தின் பின்னர் சந்தியாகோவை நேற்று வந்தடைந்தது.

வீதியின் இருமருங்கிலும் வரிசையாக நின்ற கியூப மக்கள் கெஸ்ரோ தொடர்ந்தம் எமது இதயத்தில் வாழ்வார் என கோசமிட்டனர்.

இந்த இறுதி நிகழ்வின் போது நிகரகுவா, வெனிசுவேலா நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, பிடல்கொஸ்ரோ கடந்த 1953ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி சிறிய ஆயுத குழுவொன்றுக்கு தலைமைதாங்கி பாதுகாப்பு படைதளம் ஒன்றை தாக்கினார்.

இந்த தாக்குதல் தோல்வியில் நிறைவடைந்த போதிலும், கியூப புரட்சிக்கு அது வித்திட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளை ஆரம்பித்த கெஸ்ரோ அரை நூற்றாண்டு வரை தொடர்ந்தும் கியூபாவின் நிர்வாகத்தை மேற்கொண்டார்.

இந்தநிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு அவரின் தேகநிலை பாதிப்படைந்ததை அடுத்து சகோதரரான ராகுல் கெஸ்ரோ நிர்வாகத்தினை பொறுப்பேற்றார்.

அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், தொடர்ந்தும் கியூபாவின் நிர்வாகத்திற்கு பெரிதும் ஆலோசனை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.





Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips