முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது...

Sunday, 04 December 2016 - 14:36

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81...
கிளிநொச்சி முகமாலைப்பகுதியில் தற்போது முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தொண்டு நிறுவனம் ஒன்றின் பிரதி நிதியொருவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி முகமாலைப்பகுதியின், வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் குறித்த நிறுவனம் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதற்கமைய இதுவரை இந்த பகுதிகளில் இருந்து சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.

இவற்றை அகற்றுவதற்கு தற்போது 500 வரையான பணியாளர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அந்த நிறுவனத்தின் பிரதி தெரிவித்தார்.

கடந்த 2002ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் தமது நிறுவனத்தினால் 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலகண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips