Hirunews Logo
%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D+%3B+11+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 12 January 2017 - 14:45
டெங்கு பரவும் வகையில் சூழல் ; 11 பேருக்கு அபராதம்
1,108

Views
டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 11 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதன்போது ஒருவர் வீதம் 5 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பலபிடிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கலகெதர, வதுகெதர, சினிகொட, கந்தேகொட பிரதேசங்களில் பொது சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையிலே இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, டெங்கு நோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தவதற்காக 2007 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

டெங்கு நோயினை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும் டெங்கு நோயினால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

இதனால் இது தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு தொற்றால் ஆயிரத்து 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள் இரண்டு பேர் மரணித்துள்ளதாக டெங்கு சமூக சுகாதாரம் தொடர்பான சிறப்பு மருத்துவர் ப்ரசிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,395 Views
1,387 Views
669 Views
7,632 Views
1,316 Views
2,032 Views
Top