ஜல்லிக்கட்டு தொடர்பில் இன்று தீர்மானம்

Thursday, 19 January 2017 - 9:40

%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு என்று சொல்லப்படும் ஏறுதழுவுதல் போட்டிகளை நடத்துவது தொடர்பில் இன்றையதினம் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் நாட்டில் பாரம்பரியமாக இடம்பெற்று வந்த இந்த போட்டிகளுக்கு, மிருகவதைக்கு எதிரான அமைப்புகளின் அழுத்தத்தினால் உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.

இந்த தடையை நீக்க வலியுறுத்தி தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் தற்போது தீவிர நிலையை அடைந்துள்ளன.

சென்னை மெரீனா கரையிலும், அலங்காநல்லூரிலும் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மிருகவதைக்கு எதிரான அமைப்பான பீட்டாவை தமிழகத்தில் தடை செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் சசிகலா நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏறுதழுவுதல் போட்டிகளை மீண்டும் தமிழகத்தில் நடத்த வலியுறுத்தி, யாழ்ப்பாணத்திலும் நேற்றைதினம் அமைதி போராட்டம் ஒன்று நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips