பேச்சுவார்த்தை இணக்கப்பாடற்ற நிலையில் நிறைவு...

Sunday, 22 January 2017 - 12:34

%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாகாண சபை முதலமைச்சர்களுக்கு இடையில் இன்று காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடற்ற நிலையில் நிறைவடைந்தது.

இந்த கலந்துரையாடலின் போது, இடம்பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திர கட்சி எவ்வாறு போட்டியிட வேண்டும் என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலின் போது, மகிந்த ராஜபக்சவுடன் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, ஜொன்ஸ்டன் பர்ணாண்டோ, மகிந்த யாப்பா அபயவர்தன மற்றும் காமினி லொக்குகே ஆகியோர் பங்குகொண்டனர்.

அத்துடன், பொது ஜன முன்னணியின் தலைவர் ஜி.எல். பீரிசும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 6 மாகாண முதலமைச்சர்கள் கலந்து கொண்டதுடன், வட மத்திய மாகாண சவையின் முதலமைச்சர் பேசல ஜயரட்ன கலந்து கொள்ளவில்லை.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips