உந்துருளி தலைக்கவசம் அணிவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்...

Friday, 24 February 2017 - 16:22

%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D...
தலைக்கவசம் அணிவது தொடர்பான 10 ஒழுங்குவிதிகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.
 
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
 
உந்துருளி செலுத்துகின்ற மற்றும் அதில் பயணிக்கின்ற ஒவ்வொருவரும் பாதுகாப்பான தலைக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.
 
குறித்த தலைக்கவசமானது, அணிபவரின் தலைக்கு அளவானதாக இருக்க வேண்டும்.
 
அத்துடன், நாடிப் பட்டி பொருத்தப்பட்டிருத்தல் வேண்டும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அத்துடன், அணிபவரின் முகத்தை மறைக்கும் வகையில் குறித்து பாதுகாப்பான தலைக்கவசம் அமையக் கூடாது.
 
பாதுகாப்பான தலைக்கவசம் ஒளித்தெறிப்பு எதுவும் இன்றி, சுலபமாக பார்க்கக்கூடியதாக தொண்ணூறு சதவீதம் தனியொரு நிறத்தில் இருத்தல் வேண்டும்.
 
தலைக்கவசம் தொடர்பான இலங்கையின் தராதரங்களுக்கு  அமைய  பாதுகாப்பான தலைக்கவசங்கள் அமைய வேண்டும் எனவும், வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


தலைக்கவசம் அணிவது தொடர்பான முக்கிய 10 விடயங்கள் வர்த்தமானியில்


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips