மொசூல் பொதுமக்கள் பலர் கண்ணிவெடிகளுக்கு அகப்பட்டு உயிரிழப்பு!

Sunday, 26 February 2017 - 20:09

%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
ஈராக்கின் மேற்கு மொசூல் நகரத்தில் இருந்து வெளியேறும் பொதுமக்கள் பலர் கண்ணிவெடிகளுக்கு அகப்பட்டு உயிரிழந்ததாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று முன்தினம் முதல் இன்றுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்ணிவெடி தாக்குதலுக்கு உள்ளாகி மரணமாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கு மொசூலை நோக்கி ஈராக்கிய படையினர் முன்னேறிவரும் நிலையில் அதனை அண்டிய கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி பயணிக்கும்போதே இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

ஐ. எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முக்கிய நகரான மொசூலை கைப்பற்றும் நோக்கில் ஈராக்கிய துருப்பினர் கடந்த 10 நாட்களாக போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips