'ஒபாமா கேர்' திட்டத்துக்கு எதிரான 'டிரம்ப்'பின் காப்பீட்டு மசோதா தோல்வி..

Saturday, 25 March 2017 - 12:05

%27%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%27+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%27%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%27%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF..
அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா சுகாதார காப்பீட்டு திட்டம் கொண்டு வந்தார்.

மிக மலிவான செலவில் மருத்துவ வசதி கிடைக்கும் வகையிலான இத்திட்டத்திற்கு 'ஒபாமா கேர்' என பெயரிடப்பட்டது.

அதற்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.

அதை ரத்து செய்யும் வகையில் புதிய அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் கொண்டு வந்தார்.

அதற்கு ஒப்புதல் பெற பாராளுமன்றத்தில் மசாதா தாக்கல் செய்யப்பட்டது.

அதன் மீதான விவாதம் நடத்தப்பட்டு பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் டிரம்ப் கொண்டு வந்த மசோதா கடைசி நிமிடத்தில் தோல்வி அடைந்தது.

அந்த மசோதா நிறைவேற குறைந்தது ஆளும் குடியரசு கட்சி எம்.பி.க்களின் 215 ஓட்டுகள் கிடைக்க வேண்டும். ஆனால் 28 முதல் 35 ஓட்டுகள் குறைவாக கிடைத்தன.

அமெரிக்காவில் தற்போதைய பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் மற்றும் செனட் ஆகிய இரு அவைகளிலும் ஆளும் குடியரசு கட்சி எம்.பி.க்களே கூடுதலாக உள்ளனர்.

இருந்தும் அதிபர் டிரம்ப் கொண்டு வந்த புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கான மசோதா தோல்வி அடைந்தது.

அதற்கு ஆளும் கட்சி எம்.பி.க்கள் சிலர் எதிர்த்து ஓட்டு போட்டதே காரணமாகும்.

பாராளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வி ஏற்பட்டதால் அதிபர் டிரம்ப் தான் கொண்டு வந்த மசோதாவை வாபஸ் பெற்றார். இது அவருக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.

ஏனெனில் தேர்தல் பிரசாரத்தின் போது 'ஒபாமா கேர்' திட்டத்தை வாபஸ் பெறுவேன் என டிரம்ப் பிரசாரம் செய்தார்.

தற்போது அது முடியாமல் போய் விட்டது. 'ஒபாமா கேர்' திட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல நல்ல அம்சங்கள் உள்ளதால் ஆளும் கட்சி எம்.பி.க்கள் எதிர்த்து வாக்களித்ததாக கூறப்படுகிறது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips