காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 34 வது நாளாகவும் தொடர்கிறது..

Saturday, 25 March 2017 - 19:32

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+34+%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D++%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81..
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 34 வது நாளாகவும் இன்று தொடர்கிறது.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் கடந்த மாதம் 20 ஆம் திகதி குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை உடன் வெளிப்படுத்த கோரி குறித்த போராட்டம் நடைப்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிளிநொச்சி பன்னங்கண்டி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 4 வது நாளாகவும் தொடர்கிறது.

தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் செய்தல் மற்றும் அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் தரப்படவேண்டும் என தெரிவித்தே குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

எமது பிராந்திய செய்தியாளர் நிபோஜன்


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips