தென் கொரியா முன்னாள் அதிபர் பார்க் விரைவில் கைது..

Monday, 27 March 2017 - 10:38

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
ஊழல் குற்றச்சாட்டுகளால் தென் கொரியா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பார்க் கியூன் ஹே விரைவில் கைதாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கொரியாவில் அதிபர் பார்க் கியூன் ஹே தலைமையிலான அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவருகிறது.

அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில், அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிக முக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.

மேலும், அதிபருடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று, இவர் ஆதாயம் அடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தின.

இதையடுத்து, கடந்த மாதம் முதல் திகதி சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார். 

மேலும், அதிபர் பார்க் கியூன் ஹே உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுமார் 13 லட்சம் மக்கள் பங்கேற்ற பேரணியும் ஆர்ப்பாட்டமும் சியோல் நகரில் கடந்த ஆண்டில் நடைபெற்றது. 

இதையடுத்து, பாராளுமன்றத்தில் பார்க் கியூன் ஹே-வுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு இம்மாதம் பத்தாம் திகதி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பார்க் கியூன் ஹே மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் அந்நாட்டின் லஞ்ச ஊழல் தடுப்பு கண்காணிப்பக விசாரணை முகமை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

அதன்படி, சியோல் நகரில் உள்ள லஞ்ச ஊழல் தடுப்பு கண்காணிப்பக அலுவலகத்தில் அவர் ஆஜரானார். பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் சுமார் பத்து நாட்களுக்கு பின்னர் மக்களிடையே தோன்றிய முன்னாள் அதிபரை காண அவரது ஆதரவாளர்களும், ஊடகவியலாளர்களும் அங்கு குவிந்திருந்தனர்.

விசாரணை அதிகாரிகள் மற்றும் தென் கொரியா அரசின் தலைமை சட்டத்தரணியின் கேள்விகளுக்கு பதிலளித்த பார்க், அந்த காட்சியை வீடியோ படம் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

முதல்நாள் விசாரணை முடிந்து கீழே இறங்கி வந்த பார்க், மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். நடைபெற்று வரும் இந்த விசாரணைக்கு நேர்மையான முறையில் ஒத்துழைப்பு அளிப்பேன்’ என்று குறிப்பிட்டார்.

மறுநாளும் அதற்கு அடுத்த நாளும் விசாரணைக்கு ஆஜரான பார்க்கிடம் அதிகாரிகள் துருவித்துருவி கேள்விகளை கேட்டு அவர் மீதான குற்றச்சாட்டை பலப்படுத்தும் ஆதாரங்களை சேகரித்தனர்.

இதில் கடந்த வாரத்தில் காலையில் விசாரணைக்கு வந்த பார்க்கிடம் மறுநாள் அதிகாலை வரை தொடர்ந்து 22 மணி நேரம் வரை விசாரணை நடைபெற்றது.

அவர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹே விரைவில் கைது செய்வதற்கான உத்தரவை அந்நாட்டின் தலைமை நீதிமன்றத்தில் இருந்து பெற விசாரணை முகமை இன்று முடிவெடுத்துள்ளது.

நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய - மிக உயர்வான அதிபர் பதவியை தவறாக பயன்படுத்தி தனியார் நிறுவனங்களிடம் இருந்து பார்க் கியூன் ஹே லஞ்சம் பெற்றதும், அதற்காக அரசு ரகசியங்களை வெளிப்படுத்தியதும் இதுவரை நடைபெற்ற விசாரணையில் தகுந்த ஆதாரங்களின் மூலமாக நிரூபணம் ஆகியுள்ளது.

எனவே, சட்டரீதியான அடுத்தகட்ட நடவடிக்கையாக கோர்ட்டில் இருந்து அவரை கைது செய்வதற்கான பிடி வாரண்டை பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன என விசாரணை முகமை அதிகாரிகள் இன்று குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து, பார்க் கியூன் ஹே விரைவில் கைதாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips