வடக்கு மற்றும் தெற்கு யோசனைகள் ஆராயப்பட்டுள்ளன - பிரதமர்

Wednesday, 29 March 2017 - 19:35

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9+-+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
மாகாண சபைகளின் அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பில் வடக்கு மற்றும் தெற்கில் இருந்து கிடைக்கும் யோசனைகள் ஆராயப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
 
மருதானை – சுதுவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
சகல மதங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
 
சகல மதங்களுக்கும் சமனான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
 
நாட்டை பிரிக்காது அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது என்பது தொடர்பிலே அவதானம் செலுத்த வேண்டும்.
 
நாட்டை பிரிக்குமாறு எவரும் கோரவில்லை.
 
மாகாண சபைகளின் அதிகாரங்களை அதிகரிக்குமாறு  வடக்கு மற்றும் தென் மாகாண முதலமைச்சர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.
 
ஆனால், நாட்டை பிரிக்குமாறு எவரும் யோசனை முன்வைக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips