சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவுள்ள பதவி தொடர்பில் பல்வேறு கருத்துக்கள்

Thursday, 27 April 2017 - 20:30

%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
முப்படை உள்ளடங்கிய புதிய பிரிவொன்று ஸ்தாபிக்கப்படுவது இராணுவ ஆட்சியொன்றை கொண்டு வரும ்நோக்குடன் இல்லை என அமைச்சர் சரத் பொன்சேகா இன்று தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

எவ்வாறாயினும் , அமைச்சர் சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்படவுள்ள பதவி தொடர்பில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில ் கலந்து கொண்ட அமைச்சர்களான  எஸ்.பீ.திஸாநாயக்க மற்றும ்விஜித் விஜயமுனி ஆகியோர் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

ஜனாதிபதியினால் , அமைச்சர் சரத் பொன்சேகா தலைமையில் ஸ்தாபிக்கப்படவுள்ள பிரிவு பாரதூரமானது இல்லை என அமைச்சர் எஸ்.பீ.தீஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

எனினும் , குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா , இது நகைப்புக்குரிய விடயம் இல்லை எனவும் , அமைச்சரவை தீர்மானத்தின் பின்னர் அது ஸ்தாபிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

அதேபோல் , ஆளுங்கட்சியினர் மற்றும்  எதிர்க்கட்சியினர் போன்று தொழிற்சங்க பிரதிநிதிகளும் இதற்கு எதிராகவும் மற்றும் ஆதரவாகவும் இன்று கருத்து தெரிவித்திருந்தனர்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips