கியூபாவில் ராணுவ விமானம் மலையில் மோதி விபத்து: பலர் பலி

Sunday, 30 April 2017 - 15:41

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%3A+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
கியூபா ராணுவ விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 8 பேர் பலியாகியுள்ளனர்.

வெளிநாட்டு செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன.

கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் இருந்து ஒரு ராணுவ விமானம் புறப்பட்டு சென்றுள்ள நிலையில், அதில் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 8 பேர் பயணம் செய்துள்ளனர்.

அந்த விமானம் ஹவானாவில் இருந்து 80 கி.மீட்டர் தூரத்தில் பறந்த போது லோமா டி லா பிமென்டா மலையில் மோதி நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 8 பேரும் உடல் கருகி பலியாகினர்.

தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடக்கிறது.

கியூபாவில் கடந்த 2010-ம் ஆண்டு விமானம் விழுந்து நொறுங்கியது. அதில் 68 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips