ஒன்பது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஒரு இராஜாங்க அமைச்சர் பதவிப்பிரமாணம்

Monday, 22 May 2017 - 10:10

%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழ் 9 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள் மற்றும் ஒரு ராஜாங்க அமைச்சுக்கான புதிய அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.
 
இதன்படி, முன்னர் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த மங்கள சமரவீரவுக்கு புதிய அமைச்சரவை மாற்றத்தின் படி நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவுக்கு வெளிவிவகார அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
 
துறைமுக அபிவிருத்தி அமைச்சராக இருந்த அர்ஜுன ரணதுங்கவுக்கு பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
 
பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த ஷந்திம வீரகொடிக்கு திறன் விருத்தி தொழில் பயிற்சி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
 
புதிய அமைச்சரவையில் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சு மஹிந்த சமரசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
முன்னர் அமைச்சு பதவியில் இருந்து விலகிய திலக் மாரப்பனவுக்கு புதிய அமைச்சரவையில் அபிவிருத்தி பணிகள் அமைச்சு பதவி  வழங்கப்பட்டுள்ளது.
 
ஊடக துறை அமைச்சராக பதவி வகித்த கயந்த கருணாதிலக்கவுக்கு புதிதாக காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
 
சமூர்த்தி அபிவிருத்தி அமைச்சராக இருந்த எஸ்.பி திஸாநாயக்கவுக்கு புதிய சமூக வலுவூட்டல் நலன்பேணல் மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
 
தொழில் அமைச்சராக பதவி வகிக்கும் டபிள்யூ.டி.ஜே செனவிரட்னவுக்கு மேலதிகமாக சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சு பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
 
இதனிடையே, மீன்பிடிதுறை அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்குக்கு மேலதிகமாக மகாவலி அபிவிருத்தி இராஜங்க அமைச்சு பதவியும் வழங்கப்பட்டுள்ளது.








Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips