இந்திராகாந்தியும், எம்.ஜீ.ஆரும் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக கே.பி தகவல்..

Tuesday, 23 May 2017 - 7:33

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AF%80.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%87.%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D..
இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோவினை, விடுதலைப் புலிகளுக்கு உதவிசெய்யுமாறு, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
 
விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிவிவகார செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்து தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்புடும் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
ரோ உளவுப்பிரிவானது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளை முன்னெடுக்கும் படி, இந்திராகாந்தியினால் உத்தரவிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இலங்கையில் இயங்கிய பல்வேறு தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும், இந்திராகாந்தி உதவியளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜீ.ஆர். எனப்படும் எம்.ஜீ.ராமசந்திரன் அதிக அளவான நிதியை வழங்கியுள்ளதாகவும் கே.பி கூறியுள்ளார்.
 
இந்த நிதியின் ஊடாகவே அதிக ஆயுதங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips