சிறுநீரகத்திற்காக சவூதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு

Tuesday, 23 May 2017 - 20:16

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
சவூதி அரேபியாவிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்ற நிலையில் , சிறுநீரகங்களை பெற்றுக்கொள்வதற்காக வீட்டு உரிமையாளரால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் இலங்கை தூதரகத்தின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் ஒருவர ்இதனை தெரிவித்திருந்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் அமைச்சர் தலதா அதுகோரலவின் ஆலோசனையின் பேரில் சவூதி ரியாத் நகரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் டர்ரிஹா காவற்துறை இணைந்து இந்த பணிப்பெண்னை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பலாத்காரமான முறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் தம்புள்ளை , கண்டலம பகுதியை சேர்ந்த டபில்யூ இந்திராகாந்தி என்ற பெண்ணாவார்.

இதன் போது , உரிமையாளரால் குறித்த பெண்ணின் இரண்டு மாத சம்பளமும் மற்றும் இலங்கை வருவதற்கான விமான பயண சீட்டும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips