ஹிக்கடுவை தூப்பாக்கிச் சூடு – விசாரணை செய்ய 4 காவற்துறை குழுக்கள்..

Wednesday, 24 May 2017 - 8:02

%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81+%E2%80%93+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
ஹிக்கடுவை பிரதேச செயலத்திற்கு முன்னாள் அமைந்துள்ள ஸ்டிகர் விற்பனை நிலையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஹிமால் என்ற ஸ்டிகர் சஜித் என்பவர், 2015 ஆம் ஆண்டு ஹிக்கடுவை - பிங்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் ஹிக்கவை – பதன பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான இரண்டு இளைஞர்கள் பலியான நிலையில், இந்தக் கொலை பாதாள குழுக்களிடையே நீண்டகாலமாக காணப்பட்ட முரண்பாடு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என காவற்துறை தெரிவிக்கின்றது.

2015 இடம்பெற்ற கொலை தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போது துப்பாக்கிச் சூட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள டி-56 ரக துப்பாக்கி நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஹிமால் என்ற ஸ்டிகர் சஜித் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நபர் என ஹிக்கடுவை காவற்துறை கூறியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மேற்குறிப்பட்ட நபருடன் மேலும் ஒருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக காலி மாவட்ட உதவி காவற்துறை அதிகாரி சதிஸ் கமகேவின் கீழ் 4 காவற்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.





Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips