சீரற்ற காலநிலை காரணமாக அரச அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்து!

Friday, 26 May 2017 - 12:51

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%21
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் அன்றாட பொதுவாழ்வுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் அனர்த்த நிலை ஏற்பட்டுள்ள பிரதேசங்களின்  மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அரச பணியாளர்களின் விடுமுறைகள் மீண்டும் அறிவிக்கும் வரை ரத்துச்செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர்கள் உடனடியாக அவர்களின் பணியிடத்திற்கு வருகை தர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , எவராவது அரச அதிகாரியொருவர் வௌ்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டிருந்தால் , அவருக்கு பணிக்கு வருகை தர முடியாத நிலை காணப்பட்டால் , அவரது இரண்டாவது அதிகாரி அல்லது மாற்று அதிகாரி உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வௌ்ளப்பெருக்கு அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள பிரதேசமொன்றிற்கு அதிகாரியொருவரின் பற்றாக்குறை நிலவுமாயின் , ஓய்வு பெற்ற அதிகாரியொருவரை சேவையில் ஈடுபடுத்த குறித்த மாவட்டத்தின் மாவட்ட செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் , முகாம்களுக்கு பாதிக்கப்பட்டவர்களை அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மற்றும் பொதுமக்களின் சொத்துக்களை காவற்துறையினரை ஈடுபடுத்தி பாதுகாப்பதற்கும் இதன் போது குறித்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.






Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips