இலங்கையில் சீனாவின் செல்வாக்கை குறைக்க இந்தியா?

Friday, 26 May 2017 - 13:39

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%3F
இலங்கையில் சீனாவின் செல்வாக்கை குறைக்க வேண்டுமாக இருந்தால், இந்தியா பாரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலோபாய கற்கை நிபுணர்களை மேற்கோள் காட்டி ஃபோர்ப்ஸ் இணைத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.

சீனா இலங்கையில் பல கோடி டொலர்கள் பெறுமதியான வேலைத்திட்டங்களை அமுலாக்கிவருகிறது.

அதன் ஊடாக இலங்கையை தமது வர்த்தகம் மற்றும் இராணுவ தளமாக மாற்றிக் கொள்ள சீனா முயற்சித்து வருவதாக அந்த ஊடகம் கூறியுள்ளது.

இந்தியாவும் அதே அளவான வேலைத்திட்டங்களைக் கொண்டிருக்கின்ற போதும், அது சார்ந்த முன்னெடுப்புகளும், நிகழ்ச்சித்திட்டங்களும் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கிறது.

சில குறிப்பிட்ட ராஜதந்திர விஜயங்களின் ஊடாக மாத்திரம், சீனாவின் செல்வாக்கை இந்தியாவினால் குறைத்துவிட முடியாது என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips