சுகாதார அமைச்சின் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டமைக்கு காவல்துறையினரே பொறுப்பு கூற வேண்டும் - லஹிரு

Thursday, 22 June 2017 - 20:00

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81
சுகாதார அமைச்சின் வளாகத்தில் பலவந்தமாக உள்நுழைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவத்துக்கு தலைமைத்துவம் வழங்கிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த ஜயகொடி இதனைத் தெரிவித்துள்ளார்.
 
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க சுகாதார அமைச்சின் வளாகத்தில் பொறுத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வி. எனப்படும் நுண்ணிய மின்சுற்றுக் காணொளி காட்சிகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அத்துடன், அரச சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்தும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, அரச சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டமைக்கு காவல்துறையினரே பொறுப்பேற்க வேண்டும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
 
காவல்துறை விசேட படையணிதான் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.
 
இந்த நிலையில், அரச சொத்துக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியவர் யார் என்பதைத் தாம் பார்த்ததாக லஹிரு வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips