நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்த தமக்கு அவசியம் இல்லை - ஞானசார தேரர்

Thursday, 22 June 2017 - 20:02

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D
நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்த தமக்கு அவசியம் இல்லை என பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்கிரிய பீடாதிபதியை இன்று சந்தித்து ஆசிபெற்றதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாம் கைதுசெய்யப்படுவதை தடுக்குமாறு உத்தரவிடக்கோரி ஞானசார தேரர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டது.

குறித்த மனு இன்று முற்பகல், பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழாமின் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஞானசார தேரரின் சட்டத்தரணிகளால் அந்த மனு மீளப்பெறப்பட்டுள்ளது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips