முன்னாள் காதலியிடம் நிதி மோசடி செய்த நபர் கைது...

Friday, 23 June 2017 - 10:25

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...
உயர் தர மாணவியொருவரிடம் இருந்து அவரின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் வௌியிடுவதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ள நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹாவை  சேர்ந்த மாணவியுடன் நீண்டகாலமாக காதல் தொடர்பை பேணி வந்துள்ள குறித்த நபர் , ஸ்கைப் மூலமாக அவரின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பெற்றுள்ளார்.

பின்னர் அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டுள்ள நிலையில் , குறித்த புகைப்படங்கள் மற்றும ்காணொளிகளை தான் இணையத்தில் பதிவேற்றாமல் இருக்க தனக்கு பணம் தருமாறு கோரி மிரட்டியுள்ளார்.

இதன் காரணமாக குறித்த பெண் அவர்களின் வீட்டில் இருந்து நீண்ட நாட்களாக பணத்தினை திருடி குறித்த நபருக்கு கொடுத்து வந்துள்ளார்.

உயர் தொழிலொன்றில் இருக்கும் தந்தையின் பணம் அடிக்கடி காணாமல் போவதை தொடர்ந்து அவரின் மகள் குறித்த பணத்தை திருடுவதை அவரது தாய் கண்டுபிடித்துள்ளார்.

பின்னர் இது தொடர்பில் குறித்த பெண்ணிடம் விசாரித்ததில் ,சம்பவம் தொடர்பில் உண்மைகள் வௌிவந்துள்ளன.

தனக்கு தொழிலொன்று இல்லாத காரணத்தால் தாம் இவ்வாறு பணம் பெற்றதாக குறித்த சந்தேகநபர் காவற்துறையில் தெரிவித்துள்ளார்.

அவரின் கணணியில் இருந்து குறித்த மாணவியின் பெரும்பாலான நிர்வாணப் புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips