Update :- 148 பேரின் உயிரை பறித்த எண்ணெய் கொள்கலன் தீ விபத்து : விபத்துக்கான காரணம் வௌியானது!

Sunday, 25 June 2017 - 11:35

Update+%3A-+148+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%3A+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%21
பாகிஸ்தானின் அகமட்பூர் பகுதியில் எண்ணெய் கொள்கலன் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்திற்கு முகம் கொடுத்த மேலும் நூற்றுக் கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் குறைந்தபட்சம் 6 சிற்றூர்ந்துகளும் 12 உந்துருளிகளும் தீக்கிறையானதாக பாகிஸ்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் சிலர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், உடல்கள் தீயில் கருகியுள்ள நிலையில் ஏனையவர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் கொள்கலனில் கசிவு ஏற்பட்டிருந்த நிலையில், அருகில் இருந்த ஒருவர் சிகரட் ஒன்றை பற்றவைத்ததனை அடுத்து வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து இடம்பெற்ற போது குறித்த கொள்கலனில் 25 ஆயிரம் லீற்றர் எண்ணெய் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் மீட்புப் பணிகளுக்காக இராணுவ உலங்கு வானுர்திகளும் பயன்படுத்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

update :- Sunday, June 25, 2017 4.45 pm
---------------------------------------------------------

பாகிஸ்தானில் இன்று காலை எரிபொருள் போக்குவரத்து பாரவூர்தி ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் எரிபொருள் அள்ளச்சென்ற 100 பேர் உடல்கருகி பலியாகினர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் நகரில் இன்று காலை எரிபொருள் போக்குவரத்து பாரவூர்தி சாலையின் வளைவில் திரும்பும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால், பாரவூர்தியிலிருந்த எரிபொருள் சாலையில் சிந்தி ஆறாக ஓடியது.

இதையறிந்த, அப்பகுதி கிராம மக்கள் கையில் வாளிகளுடன் எரிபொருள் அள்ள பாரவூர்தியை முற்றுகையிட்டனர்.
 
100-க்கும் அதிகமானோர் பாரவூர்தியிலிருந்து சிந்திய எண்ணெயை அள்ளிக்கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக பாரவூர்தி தீப்பிடித்து எரிந்தது.

இதனால், பாரவூர்தியைச் சுற்றியிருந்த 100 பேர் உடல்கருகி பரிதாபமாக பலியாகியுள்னர்.

75 பேர் தீக்காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
தீ விபத்து நடந்த இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளதாகவும், தீ விபத்தின் போது பாரவூர்தியின் அருகே இருந்த 6 சிற்றூந்துகள் மற்றும் 12 உந்துருளிகள் எரிந்து நாசமானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips