Hirunews Logo
+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%21
Monday, 17 July 2017 - 14:44
இலங்கை கடற்படைக்கு இந்தியா வழங்கவுள்ள யுத்தக்கப்பல்!
10,924

Views
இலங்கை கடற்படையினருக்கான மிகப்பெரிய யுத்தக் கப்பல் இந்தியாவினால் இந்த மாதம் 22ம் திகதி வழங்கப்படவுள்ளது. 
 
த ஹிந்துஸ்தான் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
 
நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், இலங்கைக்கான 2 கப்பல்களை கட்டுவதற்காக 1000 கோடி இந்திய ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. 
 
கோவாலில் உள்ள அரச கப்பல் கட்டல் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படும் இந்த கப்பல், 105 மீற்றர் நீளமான இந்த யுத்தக் கப்பல், 2400 டொன் எடைகொண்டது.
 
இந்த கப்பல் இந்த மாதம் 22ம் திகதி விசேட நிகழ்வொன்றில் வைத்து இலங்கை கடற்படைக்கு வழங்கப்படுவதுடன், எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 2ம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 
 
அதேநேரம் இவ்வகையான இரண்டாவது யுத்தக் கப்பல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்படும் என்று, இந்திய கடற்படை ரியல் அட்மிரல் சேகார் மிட்டால் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
2,515 Views
3,250 Views
1,480 Views
23,605 Views
305 Views
25,679 Views
Top