Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Monday, 17 July 2017 - 17:19
சிங்கள பாடசாலையொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரமழான் விழாவால் பதற்றம்! (காணொளி)
24,657

Views
ஹிக்கடுவை ஸ்ரீ சுமங்கல வித்தியாலயத்தில் இன்றைய தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ஹிக்கடுவை கல்வி வலய பிரிவின் ரமழான் விழாவுக்கு, அப்பாடசாலையில் பழைய மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விழாவில் கலந்துக்கொள்ள கிங்தொட சஹிரா வித்தியாலயத்தின் மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.

இதன்போது, பாடசாலையின் அதிபர் மற்றும் பழைய மாணவர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டிருந்தார்.

தமது பாடசாலையில் இவ்வாறானதொரு விழா இதற்கு முன்னர் நடத்தப்படவில்லை எனவும், பௌத்த பாடசாலையில் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்படுவதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் பழைய மாணவர்கள் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த நிகழ்வுகள் தம்மால் இன்றி, கல்வி அமைச்சினாலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அப்பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

பின்னர், பழைய மாணவர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக குறித்த விழாவில் கிங்தொட சஹிரா வித்தியாலயத்தின் மாணவர்களை கலந்துகொள்ள வர ​வேண்டாம் என, சுமங்கல வித்தியாலயத்தின் அதிபர் அறிவித்துள்ளார்.

அதனையடுத்து, அழைக்கப்பட்டிருந்த மற்றைய பாடசாலை மாணவர்களின் பங்கேற்பில் முஸ்லிம் கலாசார விழாவாக இந்த விழா இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,703 Views
11,711 Views
727 Views
3,814 Views
18 Views
5,401 Views
Top