Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%21+
Monday, 17 July 2017 - 19:53
பேஸ்புக் விருந்துபசாரத்திற்கு வந்த யுவதிகளை வனப்பகுதிக்கு கடத்தி சென்ற இளைஞர்கள்!!
36,399

Views
சமூக வலைத்தளத்தின் ஊடாக அறிவித்தல் விடுக்கப்பட்டு உணவகமொன்றில் விருந்துபசாரம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு போதைப்பொருள் பாவித்து மோசமாக நடந்து கொண்ட நபர்களுக்கு எதிராக உதம்மிட கிராமவாசிகள் நேற்யை தினம் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் , அங்கு இடம்பெற்ற மேலுமொரு சம்பவம் தெரியவந்துள்ளது.

அது , அங்கு வந்த மூன்று யுவதிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்காக கடத்தப்பட்ட சம்பவமாகும்.

உஸ்வெடகெய்யாவ பிரதேசத்தில் உணவகமொன்றில் இடம்பெற்ற இந்த விருந்துபசாரத்தின் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட குறித்த யுவதிகள் முச்சக்கரவண்டியொன்றை நிறுத்தி அதில் ஏறியுள்ளனர்.

பின்னர் , குறித்த முச்சக்கரவண்டியில் மேலுமொரு இளைஞர் ஏறியுள்ளார்.

அதனை தொடர்ந்து முச்சக்கரவண்டி பாதை மாறி செல்வதை அறிந்த பெண்ணொருவர் முச்சக்கரவண்டியில ்இருந்து குதித்து தப்பியுள்ளார்.

மற்றைய இரண்டு யுவதிகளையும் வனப்பகுதியொன்றிற்கு கடத்திச் சென்ற குறித்த நபர்கள் அவர்களை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

இந்நிலையில் , குறித்த இரண்டு யுவதிகளும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பெண்கள் தொழிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

23 மற்றும் 25 வயதுடைய குறித்த யுவதிகள் ஹங்குரங்கெத மற்றும் பெத்தகான பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
4,374 Views
1,249 Views
491 Views
7,480 Views
1,293 Views
1,859 Views
Top