பதக்கத்தை விற்பனை செய்யும் முயற்சியை கைவிட்ட சுசந்திகா!

Friday, 21 July 2017 - 9:16

%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%21
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய தனது பதக்கத்தை விற்பனை செய்யும் முயற்சியை கைவிட்டுள்ளதாக சுசந்திகா ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

குழப்பமடையாமல் பொறுமையாக செயற்படுமாறும் , தனக்கு கிடைக்கும் சிறிய வெகுமதியை கொண்டேனும் முடிந்தளவிலான சேவையை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி அறிவுறுத்திய நிலையில் தான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக சுசந்திகா எமது செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோர் தன்னை தொடர்பு கொண்டு இந்த பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் இதன் போது குறிப்பிட்டிருந்தார்.

இவர்களை தவிர , தற்போதைய அரசாங்கத்தின் வேறு எவரும் தன்னை தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவவில்லை என சுசந்திகா ஜயசிங்க தெரிவித்திருந்தார்.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips