அடுத்துவரும் நாட்களில் பல மாகாணங்களில் வானிலை மாற்றம்

Friday, 21 July 2017 - 12:42

%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
அடுத்துவரும் நாட்களில் நாட்டின் தென்மேற்கு பிரதேசம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என, எதிர்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேல், மத்திய, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் விட்டு விட்டு கடும் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும்.

ஊவா, கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப்பிறகு மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும்.

இடியுடன்கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்த பிரதேசத்தில் தற்காலிகமாக கடுங்காற்று வீசக்கூடும்.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக, காங்கேசன்துறை வரை மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 55- 60 கிலோமீற்றராக காணப்படலாம்.

இவ்வாறு அந்த நிலையம் அறிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips