காணாமல் போனோர் தொடர்பான அலுவலக வர்த்தமானி:ஐ.நா. பொதுச்செயலாளர் வரவேற்பு!

Friday, 21 July 2017 - 13:17

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%3A%E0%AE%90.%E0%AE%A8%E0%AE%BE.+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை உருவாக்குவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பமிட்டமையை ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரெஸ் வரவேற்றுள்ளார்.
 
ஐக்கிய நாடுகளின் இணைப் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
காணாமற்போன தங்களது அன்புக்குரிய உறவினர்களின் உண்மை நிலவரங்களை அறிய காத்திருக்கும் மக்கள் தொடர்பில் அரசாங்கம் கடந்துள்ள முக்கியமான மைல்கல் இதுவென்று அவர் கூறியுள்ளார்.
 
இந்த காரியாலயத்துக்கான ஆணையாளர்களை நியமித்து, அதன் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அந்த அலுவலகத்தின் செயற்பாட்டுக்கான ஒத்துழைப்புகளை ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து வழங்கும் என்றும் ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளர் தெரிவித்துள்ளார்.
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips