டெங்கு நோயாளர்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது 2 மணித்தியால நிபந்தனை!!

Friday, 21 July 2017 - 13:54

%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81+2+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%21%21
டெங்கு நோயாளர்கள், தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளும் முழுமையான இரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை, இரண்டு மணித்தியாலங்களில் விநியோகிக்கப்படாவிட்டால் சிகிச்சை வழங்க அது செல்லுபடியாகாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் நிறுவனங்களின் பிரதானிகளின் கூட்டத்தில் இன்று(21) கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சில தனியார் மருத்துவமனைகளில் முழுமையான இரத்த மாதிரி பரிசோதனை அறிக்கையை விநியோகிக்க இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிக காலம் எடுப்பதாக மருத்துவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கை காலதாமதமாவதால் சிகிச்சை வழங்குவதில் சிக்கல் ஏற்படுவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுளார்.

இதனால் தனியார் மருத்துவமனைகளில் இரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை இரண்டு மணித்தியாலங்களுள் கிடைக்காவிடின், அரசாங்க மருத்துவமனைகளுக்கு வந்து இலவசமாக இந்த பரிசோதனையை செய்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சர், மக்களிடம் கோரியுள்ளார்.

அரசாங்க மருத்துவமனைகளில் ஒரு மணித்தியாலத்தில் முழுமையான இரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை பெற்று கொடுக்கப்படுவதுடன், கொழும்பு தேசிய மருத்துவமனையில் 10 நிமிடங்களில் இரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை விநியோகிக்கப்படுவதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips