திடீரென இருளில் சூழ்ந்த பண்டாரவளை (காணொளி)

Thursday, 27 July 2017 - 18:35

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
நாட்டின் தென்மேற்கு பகுதிகளிலும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலநிலையில் சிறிதளவான மாற்றத்தை நாளை தொடக்கம் எதிர்ப்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி , மேல் , மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும்.

விசேடமாக திருகோணமலை , வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் , ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை , சுமார் 5 மாதங்கள் நிலவிய வறட்சியான காலநிலையை தொடர்ந்து பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை , தியதலாவ மற்றும் பண்டாரவளை பிரதேசங்களுக்கு பலத்த மழை பெய்துள்ளது.

பண்டாரவளை பிரதேசத்தில் பெய்த பலத்த மழை காரணமாக மரமொன்று உடைந்து வீழ்ந்ததில் சிற்றுர்ந்து ஒன்றிற்கு சேதமேற்பட்டுள்ளது.

சுமார் , ஒன்றரை மணி நேரம் இந்த மழை பெய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை , பண்டாரவளை பிரதேசத்தில் பெய்த பலத்த மழையின் பின்னர் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக தொடர்ந்தும் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips