பதவி விலகினார் பாகிஸ்தான் பிரதமர்

Friday, 28 July 2017 - 15:20

+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அந்த நாட்டு பிரதமர் பதவியை நீடிக்க தகுதியில்லை என அந்த நாட்டு உயர் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டது.

பனாமா பேப்பர் லீக் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பனாமாவில் உள்ள புகழ்பெற்ற, 'மோசக் பொன்சிகா' என்ற சட்ட நிறுவனம், தம்மிடம் இருந்த 1.15 கோடி பக்கங்கள் அடங்கிய இரகசிய ஆவணங்கள், 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியது.

அதில் வெளிநாடுகளில், போலியான நிறுவனங்களில் முதலீடு என்ற பெயரில், உலக தலைவர்கள், 500 இந்தியர்கள் பணம் பதுக்கி வைத்துள்ளது அம்பலமானது.

இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப். அவரது குடும்பத்தினரும் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்த 8 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவை உயர் நீதிமன்றம் நியமித்தது.

இந்த குழு விசாரணையில் பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப், இவரது மகள் மரியாம் ஷெரீப்,43, இவரது கணவர் முகம்மது சப்தார், நவாஸின் சகோதரர் ஹூசை ஷெரீப் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணை அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், நவாசை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

குற்றப்பிரிவு வழக்கும் பதிவு செய்து, அவர் மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரிக்க உத்தரவிட்டது.அதில் வெளிநாடுகளில், போலியான நிறுவனங்களில் முதலீடு என்ற பெயரில், உலக தலைவர்கள், 500 இந்தியர்கள் பணம் பதுக்கி வைத்துள்ளது அம்பலமானது.

இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப். அவரது குடும்பத்தினரும் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்த 8 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவை உயர் நீதிமன்றம் நியமித்தது.

இந்த குழு விசாரணையில் பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப், இவரது மகள் மரியாம் ஷெரீப்,43, இவரது கணவர் முகம்மது சப்தார், நவாஸின் சகோதரர் ஹூசை ஷெரீப் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணை அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், நவாசை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

குற்றப்பிரிவு வழக்கும் பதிவு செய்து, அவர் மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகியுள்ளார்.

Follow US

facebook facebook facebook facebook facebook facebook

Most Viewed Stories

Exclusive Clips