Hirunews Logo
%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D
Monday, 14 August 2017 - 6:44
அமைச்சர் விஜயதாசவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் விமல்
6,109

Views
வெளிநாட்டு சக்திகளின் தேவைகளுக்காகவே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இதனை தெரவித்தார்.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியான பென் எமர்ஷன் இலங்கை வந்திருந்தார்.

இதன்போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடக் கூடாதென தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார். 

இதேவேளை, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவுக்கு எதிராக கொடுவரப்பட உள்ள நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு, ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிபந்தனைகள் இன்றி அவருக்கு ஆதரவளிக்க தாயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலக தயார் என்றால், ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இணைவதை தவிர்த்து ஜனாதிபதியுடன் இணையுமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா அழைப்பு விடுத்துள்ளார்.
 
பதுளை - ஹாலிஎல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

ஒன்றிணைந் எதிர்கட்சியினர் சந்தர்ப்பத்திற்கமையவே செயற்படுகின்றனர் என தெரிவித்த அவர், ஒன்றிணைந்த எதிர்கட்சியில் உள்ள அனைவரும் விஜயதாச ராஜப்ஷவை ஏற்று கொள்ள போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
 
இதேவேளை, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவது தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் புதன் கிழமை கூடவுள்ள மத்திய செயற் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் இதனை எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
518 Views
2,586 Views
2,973 Views
14,840 Views
1,009 Views
16,296 Views
Top