ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 13 சுற்றுலா பயணிகள் பலி

Friday, 18 August 2017 - 6:48

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+13+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
 
அங்குள்ள லாஸ் ரம்ப்லாஸ் என்ற பிரபல சுற்றுலாப் தளத்தில் மக்கள் கூட்டம் உள்ள பகுதியில் சிற்றூர்ந்து ஒன்றை மோதச் செய்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
 
இதில் 13 சுற்றுலாப் பயணிகள் பலியானதுடன், மேலும் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
 
இந்த தாக்குதலை தங்களின் போராளிகளே நடத்தியதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஐ.எஸ். தீவிரவாதிகளாலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பதை அந்த நாட்டின் பிரதமர் மரியானோ ரஜோய் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
இதேவேளை, இந்த தாக்குதல் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
ஆனப்போதும், குறித்த சிற்றூர்ந்தை செலுத்திய சாரதி இன்னும் கைதாகவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை தெற்கு பார்சிலோனாவில் பாதுகாப்பு தரப்பினர் நடத்திய தாக்குதல்களில், பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஏ.எஃப்.பி. இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips